2021 தேர்தலுக்கு பின் திமுக காணாமல் போகும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

24 September 2020, 11:15 pm
RB Udayakumar - updatenews360
Quick Share

மதுரை: 2021 தேர்தலில் அதிமுக மக்களின் ஆதரவோடு ஆட்சி அமைக்கும் என்றும், அதன் பிறகு திமுக காணாமல் போகும் என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரையில் கழக அம்மா பேரவை சார்பாக உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ஜெயலலிதா பெண்தானே என்று பல ஏளனமாக பார்த்தார்கள். நெருப்பாற்றில் நீந்தி வெற்றிகண்டவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவினர் அனாதையாக நின்றோம். அதிமுக கட்சியின் தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் அழிக்க முடியாது. அதிமுக கட்சி தொடங்கி ஆறு மாதத்தில் வெற்றிகண்ட இயக்கம். கட்சிக்காக உழைத்த தொண்டர்களை கொண்ட இயக்கம். திமுகவில் காணொலி காட்சி வழியே உறுப்பினர்கள் சேர்த்து வருகின்றனர்.

ஜெயலலிதா காணொலி காட்சி வழியே திட்டங்களை செயல்படுத்தும்போது விமர்சனம் செய்தது திமுக. நேரத்துக்கு நேரம் பச்சோந்தி போல் திமுகவினர் பேசி வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் 27 மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து உள்ளார். கொரோனாவுக்கு பயந்து 5 மாதம் வீட்டை விட்டு எதிர்கட்சி தலைவர் வெளியே வரவில்லை என்று மக்கள் கூறுகின்றார்கள். திமுக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முதல்வர் எடப்பாடி, ரஜினி, விஜய்,முக அழகிரி ஆகியோர் உறுப்பினர்கள் சேர்த்து உள்ளனர், திமுக போலி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

திமுக ஆன்லைன், ஆப்லைன் மற்றும் ஆலே இல்லாமல் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எதிரிகள் வீழ்த்த களத்தில் ஒற்றுமையுடன் செயல்படுவோம். 2021ல் அதிமுக வெற்றி பெற்ற பின்பு திராவிட முன்னேற்றக் கழகம் சிதறு தேங்காய் போல் சிதறி ஓடி விடும். அதிமுக தலையெழுத்தை நிர்ணயிக்கும் தேர்தல் 2021. இளைஞர்களால் ஆல் பாஸ் முதல்வர் என்று அழைக்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இளைஞர் சமுதாயத்தை கருத்தில் கொண்டு அரியர்ஸ் மாணவர்கள் ஆல் பாஸ் முறையை முதல்வர் அறிவித்தார். இவ்வாறு அவர் பேசினார்.

Views: - 3

0

0