ஓட்டுநர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை…. குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைப்பு

Author: Udayaraman
4 August 2021, 11:24 pm
Quick Share

விருதுநகர்: சிவகாசி அருகே ஓட்டுநர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்த மர்கும்பலை பிடிக்க 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விசுவநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் இவர் அதே பகுதியில் வாடகை வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் தனது வாகனத்தை மணி நகர் பகுதியில் நிறுத்திவிட்டு அருகில் உள்ள வீட்டிற்கு மதிய உணவு சாப்பிடுவதற்காக விஸ்வநத்தம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அரிவாளால் தலை மற்றும் கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதைக்கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆனந்தகுமாரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் பாபுபிரசாந்த் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைத்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 179

0

0