ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் திடீரெனப் பழுதாகி நின்ற லிப்ட்: மாற்றுத்திறனாளி உட்பட சிக்கிக் கொண்ட இருவர்

Author: kavin kumar
28 September 2021, 11:27 pm
Quick Share

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக லிப்ட் திடிரென பழுது, லிப்டில் சிக்கிய ரேசன்கடை ஊழியர் இருவரை மீட்ட தீயணைப்புத்துறையினர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 30கோடியே 19லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம் கடந்த கடந்த டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. இந்நிலையில் கட்டிடத்தில் உள்ளே இரண்டு மின்தூக்கிகள் (லிப்ட் ) செயல்பட்டு வருகிறது. இன்று மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தை சேர்ந்த ரேசன்கடை ஊழியர்களான அமுதா மற்றும் மாற்றுத்திறனாளியான பிரபு ஆகிய இருவரும் லிப்டில் இரண்டாவது தளத்திற்கு சென்றபோது திடிரென லிப்ட் பழுதாகி இடையிலயே நின்றுவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கிருந்த ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் தீயணைப்புத்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து லிப்ட் கதவை உடைத்து இருவரையும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இந்த மீட்பு பணியினை மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் நேரில் பார்வையிட்டு தீயணைப்புத்துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

Views: - 190

0

0