ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற அதிகாரிகளை கண்டித்து அதிகாரிகளின் முன் தீக்குளித்த விவசாயி

5 September 2020, 10:26 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி அருகே புறம் போக்கு நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற அதிகாரிகளை கண்டித்து அதிகாரிகளின் முன் விவசாயி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள தும்பளஅள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட கிட்டேசம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம் போக்கு மேய்சல் நிலம் உள்ளது. இதில் சில ஏக்கர் நிலத்தை அதே பகுதியை கணபதி என்பவரது மகன்கள் 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். இதில் கணபதியின் பெரிய மகன் சின்னசாமி தன் நிலத்தை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலத்தின் ஒரு பகுதியில், விவசாயம் செய்து வருகிறார். அருகிலுள்ள பகுதியில் வசிக்கும் சிலருக்கு, இந்த புறம்போக்கு நிலம் வழியாக வழிப்பாதை வேண்டுமென, அரசிடம் வலியுறுத்தி வந்தனர். இதற்கு சின்னசாமி பாலக்கோடு நீதிமன்றத்தில் தான் விவசாயம் செய்யும் நிலத்தில் வழி விட முடியாது என வழக்கு தொடர்ந்து வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தனி நபருக்கு வழிப்பாதை வழங்க வருவாய்த் துறையினர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது சின்னசாமியின் குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுப்பட்னர். பின்னர் காவல்துறையினர் சின்னசாமியை தகாத வார்த்தையில் கீழே தள்ளி உள்ளனர். கீழே விழுந்த சின்னசாமி மனமுடைந்து வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணை எடுத்து வந்து தன் நிலத்தில் நின்றபடி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில், அவர் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் விவசாயி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

Views: - 0

0

0