சொத்துத் தகராறில் மகனை அடித்துக் கொன்ற தந்தை

Author: Udhayakumar Raman
31 July 2021, 7:31 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: சொத்து பாகப்பிரிவினை பிரச்சனை காரணமாக தந்தை சொந்த மகனையே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ளது கீழ்பாடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவருக்கும் அவரது தந்தை அண்ணாமலை என்பவருக்கும் சொத்து பாகப்பிரிவினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனை உறவினர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை இன்று அலெக்ஸ் பாண்டியன் வீட்டின் திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும்போது,

அண்ணாமலை என்பவர் முள்வேலி விறகு கட்டையால் அலெக்ஸ் பாண்டியன் தலையில் அடித்துள்ளார். இதில் காயம் அடைந்த அலெக்ஸ்பாண்டியன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். இதுகுறித்து தகவலின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அண்ணாமலையை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 105

0

0