அக்கா தம்பிக்குள் ஏற்பட்ட சிறிய சண்டையில் சிறுமி தற்கொலை: விளையாட்டு விபரீதமாக மாறிய சோகம்….

Author: Udhayakumar Raman
14 September 2021, 3:57 pm
Quick Share

சென்னை: அக்கா தம்பிக்குள் ஏற்பட்ட சிறிய சண்டை தற்கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திரு.வி.க நகர் கென்னடி சதுக்கம் பகுதியை சேர்ந்தவர் அசோக். இவருக்கு திருமணமாகி கீதா என்ற மனைவியும், 17 வயதில் காவியா என்ற மகளும், 14 வயதில் தினேஷ் என்ற மகனும் உள்ளனர்.காவியா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார். காவியா மற்றும் தினேஷ் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.  அப்போது தினேஷ் தான் வளர்க்கும்  மீன் தொட்டியில் உள்ள தண்ணீரை எடுத்து காவியா மீது தெளித்து விளையாடி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் இருவரையும் சமாதானம் செய்து விட்டு வெளியே சென்றுள்ளனர்.

இதனால் மனமுடைந்த காவியா வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தனக்குத் தானே தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார்.வெளியே சென்றிருந்த தினேஷ் வீட்டிற்கு வந்து பார்த்த போது தனது அக்கா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கூச்சலிட்டார் அக்கம் பக்கத்தினர் வந்து காவியாவை மீட்டு அருகில் இருந்த பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த காவியாவின் பெற்றோர்கள் தனது மகளை பார்த்து கதறி அழுதனர். திரு.வி.க நகர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 81

0

0