அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

Author: kavin kumar
3 November 2021, 2:31 pm
Quick Share

தருமபுரி: அரூர் அருகே வேலூரில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,அதிஷ்டவசமாக 54 பயணிகள் உயிர் தப்பினர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே எஸ். பட்டி பேருந்து நிறுத்தத்திற்கு அருகே வேலூரில் இருந்து சேலம் நோக்கி 54 பயணிகளுடன் அதிகாலையில் வந்த அரசு பேருந்து வந்துக்கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பேருந்தலிருந்து பயணிகள் மற்றும் நடத்துனர் முன்பக்க கண்ணாடிகளை உடைத்து வெளியே வந்துள்ளனர். இதில் சிறிய காயங்களோடு அனைவரும் நூலிழையில் உயிர் தப்பினர்.

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சாலையோரத்தில் கவிழந்த பேருந்தை மீட்டனர்.கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி ஏற்கனவே இதுபோன்ற எந்த ஒரு பாதுகாப்பு பலகைகளும் இல்லாமல் விபத்து ஏற்பட்டு மூன்று உயிர்களை இதே இடத்தில் பலியானது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த இடத்தை அபாயகரமான பகுதியாகவும், பாலங்கள் இருப்பது தெரியாத வகையில் உள்ளதால் அதற்கான குறியீட்டு பலகை வைக்க வேண்டும் என்று எஸ்.பட்டி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 171

0

0