மத்திய அரசுக்கு ஆமாம் சாமி போடும் அரசு தமிழக அரசு: கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் குற்றச்சாட்டு

20 September 2020, 8:14 pm
Quick Share

விருதுநகர்: மத்தியஅரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக அந்த திட்டத்திற்கு ஆமாம் சாமி போடும் அரசாக தமிழக அரசு இருக்கிறது என விருதுநகரில் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் குற்றச்சாட்டியுள்ளார்.

விருதுநகரில் எல்லோரும் நலமுடன் என திமுகவில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை முகாமை முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோப்டை சட்டமன்ற உறுப்பினரும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன் தொடங்கி வைத்து புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன் திமுகவில் உறுப்பினர்களாக சேர விரும்புவர்கள்ஆன்லைன் வழியாக இணையலாம் எனவும் ஆன்லைன் உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கிய நான்கு நாட்களில் 1.5 லட்சம் பேர் இணைந்து உள்ளார்கள் எனக் கூறினார்.

மேலும் இந்த திட்டத்தின் நோக்கம் மத்திய மாநில அரசுகள் எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு இளைஞர்கள் மத்தியில் தீவிரமாக உள்ளது எனவும் மாநில அரசு நீட் விவகாரத்தில் மாணவர்களை கசக்கி பிழிந்து வருகிறது என குற்றம் சாட்டினார். திமுகவில் இளைய சமுதாயத்தினர் இணைய வேண்டும் என ஆசையாக இருக்கிறார்கள் எனவும் மேலும் விருதுநகர் தெற்கு மாவட்டம் சார்பில் தொடர்ந்து 15 நாட்கள் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது என தெரிவித்தார். இந்த முகாம் மூலம் இளம் பெண்கள் இளைஞர்கள் தாய்மார்களை இணைக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார் . கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன் தமிழகத்தில் வருகிற ஆட்சி திமுக ஆட்சி தான் என மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்றார்.

மேலும் முதல்வர் மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அந்தத் திட்டத்தை சரி என்று சொன்னால் தான் தமிழகத்தில் அவர்கள் ஆட்சி இருக்கும் எனவும் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் மத்திய அரசு கொண்டு வருகிறது என்பதால் தான் அதை ஆதரித்து தன்னை காத்துக் கொள்ளவும் மாநில அரசு செயல்படுகிறது எனவும் மேலும் தங்கள் தவறை தட்டிக் கேட்காமல் இருப்பதற்காக மத்தியஅரசுக்கு ஆமாம் சாமி போடும் அரசாக தமிழக அரசு இருக்கிறது என விமர்சனம் செய்தார் மேலும் நீட் விவகாரத்தில் கலைஞர் ஜெயலலிதா இருக்கிற வரை தமிழகத்திற்கு நீட்தேர்வு வரவில்லை தற்போது அடிமைகளாக இருக்கிற இவர்கள் ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது என நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும் என கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன் தெரிவித்தார்.