புழல் மத்திய சிறையில் கோவிட் சென்டர் 50 படுக்கைகளுடன் துவக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி…

15 August 2020, 9:21 pm
Quick Share

சென்னை: தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 29 ஆயிரத்து 122 படுக்கை வசதிகள் இதுவரை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே முதல்முறையாக புழல் மத்திய சிறையில் கோவிட் சென்டர் 50 படுக்கைகளுடன் முதல் முறையாக துவக்கியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்

சென்னை புழல் மத்திய சிறையில் மகளிர் சிறை, தண்டனை சிறை, விசாரணை சிறை உள்ளிட்ட மூன்று சிறைகளிலும் 2,014 சிறைக்கைதிகள் உள்ளனர். அதில் 114 பேர் கொரணா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறைக்குள்ளேயே 6 பேரும் மருத்துவமனைகளில் 9 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு அதனை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 29 ஆயிரத்து 122 படுக்கை வசதிகள் இதுவரை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், 1,643 கோவிட் மையங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்தியாவிலேயே முதல்முறையாக புழல் மத்திய சிறையில் கோவிட் சிறப்பு மையம் 50 படுக்கை வசதிகளுடன் முதல் முறையாக துவக்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் புழல் சிறையில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் 99 பேர் குணமாகி உள்ளதாக அவர் கூறினார்.

Views: - 24

0

0