மது அருந்த பணம் கேட்டு பாட்டியை அரிவாளால் வெட்டிக் கொன்ற பேரன்

14 April 2021, 3:57 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு அருகே மது அருந்த பணம் கேட்டு பாட்டியை அரிவாளால் வெட்டிக் கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட பேரனை அரச்சலூர் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பாரதி வீதியைச் சேர்ந்தவர் முத்துசாமி, இவரது மனைவி ஜெல்லின் மேரி. இவர்களுக்கு பாரதி வெண்ணிலா, பூவிழி செல்வன் என ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். பாரதி வெண்ணிலாவுக்கு திருமணமாகி பாரதி வீதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். பூவிழி செல்வன் மனைவி ஷர்மிளா மகள் அக்ஷதா ஆகியோர் உள்ளனர். பூவிழி செல்வனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி ஷர்மிளா குழந்தையுடன் கோவையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.

நேற்று பூவிலி செல்வன் கோவையில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மது குடித்துவிட்டு மாமனார் மாமியாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் பூவிழி செல்வனை அடித்து விரட்டி உள்ளனர். பின்னர் கோவையில் மது அருந்திவிட்டு அவல்பூந்துறைக்கு நள்ளிரவு வந்து வீட்டில் இருந்த தனது தாய் ஜெலின்மேரியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் தர மறுத்த அவரது தாய் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இதனால் செய்வதறியாது ஆத்திரமடைந்த பூவிழி செல்வன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது பாட்டி 95 வயதான காளியம்மாளை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் காளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அரச்சலூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பூவிழி செல்வனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 32

0

0