குடிப்பதற்கு பணம் கேட்டு தராததால் பாட்டியை வெட்டிக்கொன்ற பேரன்

Author: Udhayakumar Raman
30 March 2021, 5:52 pm
Quick Share

வேலூர்: காட்பாடியில் குடிப்பதற்கு பணம் கேட்டு தராததால் பாட்டியை பேரன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு திருவள்ளுவர் தெரு பகுதியில் வசித்து வருபவர் சாந்தி (60). இவருடைய பேரன் அஜித் (22)என்பவரும் வசித்து வருகிறார். பலமுறை அஜித் பாட்டியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தராததால் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இரவு பாட்டி சாந்தி குடிப்பதற்கு பணம் தராததால் கத்தியால் கழுத்தை வெட்டி விட்டு அங்கிருந்து அஜீத் தப்பி ஓடிவிட்டார். இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காலையில் வெகு நேரமாகியும் கதவு திறக்கதால் சந்தோகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த காட்பாடி போலீசார் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அஜித்தை தேடி வருகின்றனர்.

Views: - 73

0

0