மாணவர்கள் போற்றும் மகத்தான ஆட்சி எடப்பாடியின் ஆட்சி:அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

8 September 2020, 6:00 pm
Quick Share

விருதுநகர்: மாணவர்கள் போற்றும் மகாத்தான ஆட்சி எடப்பாடியர் ஆட்சி என விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

விருதுநகர் 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் கடந்த மாதம் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று விருதுநகர் அய்யனார் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று உயிரிழந்த முருகேசன் அவருடைய திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதன்பின்பு விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவரும் தற்போதைய பன்னிரண்டாவது வார்டு உறுப்பினருமான முருகேசனின் உருவப்படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த கூட்டத்தில் இறந்த முருகேசனுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தற்போது தமிழகத்தில் பண்பட்ட ஆட்சியை தமிழக முதல்வரும், துணை முதல்வரும் நடத்தி வருவதாகவும், மாணவர்களும் மக்களும் போற்றக்கூடிய வகையில், அன்பான நல்லாட்சி நடைபெற்று வருவதாக கூறினார்.

Views: - 0

0

0