ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கிய அரசு தலைமை கொறடா

7 September 2020, 9:21 pm
Quick Share

அரியலூர்; அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை அரசு தலைமை கொறடா வழங்கினார்.

பள்ளிகல்வி துறையின் சார்பில் கல்வி பணியில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி தமிழக அரசால் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இதில் நல்லாசிரியர்களுக்கு விருதுடன் பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும் 36.5 கிராம் வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை அரசு தலைமை கொறடா தாமரை.ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 8

0

0