காவல் நிலையத்தில் உள்துறை அமைச்சர் திடீரென ஆய்வு

Author: Udhayakumar Raman
17 October 2021, 1:28 pm
Quick Share

புதுச்சேரி:முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரியில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் தொடர்ச்சியாக போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர் மேலும் இரு சக்கர வாகன திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில் முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நள்ளிரவில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது எத்தனை வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்த அவர் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வெளியில் உள்ள குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தினார் மேலும் இரவு நேர ரோந்தை தீவிரப்படுத்தவும் காவலர்களுக்கு உத்தரவிட்டார். நள்ளிரவில் சுமார் அரை மணி நேரம் காவல் நிலையத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 170

0

0