சொத்தை கேட்டு மிரட்டி சொந்த அண்ணனை, ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய தம்பி.,.!

25 February 2021, 7:48 pm
Quick Share

கன்னியாகுமரி: அண்ணனை உடன் பிறந்த தம்பி ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரிமாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சுப்பிரமணிபுரத்தை சேர்ந்தவர்கள் சுயம்பு( 58 ) நாகலிங்கம் (50 ) இருவரும் உடன் பிறந்த சகோதர்கள். சுயம்ப்புவின் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைப்பெற இருப்பதால் தன் வீட்டை விற்றதாகவும், இதில் அண்ணன் தம்பி ஆகிய இருவரின் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக கூறபடுகிறது. இந்நிலையில் சுயம்பு நேற்று ஊரில் தென்னந்தோப்பில் தண்ணீர் பாய்க்க சென்று உள்ளார்.


அங்கே வந்த அவரது தம்பி உன் நிலத்தை எனக்கு தந்து விடு என கூறி, மிரட்டி, தென்னந்தோப்பில் ஓட ஓட விரட்டி, கொண்டு வந்த அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறிகின்றனர். படுகாயம் அடைந்த சுயம்புவை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருதுவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டு உள்ளனர். தலைமறைவான தம்பி நாகலிங்கத்தை ஆரல்வாய்மொழி போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 4

0

0