வீட்டிலேயே ரமலான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய இஸ்லாமிய சகோதரர்கள்

14 May 2021, 2:31 pm
Quick Share

ராணிப்பேட்டை: தமிழக அரசின் உத்தரவை கடைப்பிடித்து வீட்டிலேயே ரமலான் பண்டிகையை இஸ்லாமிய சகோதரர்கள் உற்சாகமாக கொண்டாடினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை விசாரம் வாலாஜா உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் இஸ்லாமிய சகோதரர்கள் அதிகப்படியாக வாழ்ந்து வருகின்றனர். கொரொனா நோய்த்தொற்று காரணமாக அதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் எந்த ஒரு சமுதாயத்தினரும் திருவிழா விழாக்கள் கூட்டமாக கூடி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றும் வகையில் ராணிப்பேட்டை மேல்விஷாரம் வாலாஜா உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் மசூதி மற்றும் ஈத்கா மைதானத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடும் மசூதிகள் மற்றும் இயக்க மைதானங்கள் ரமலான் பண்டிகையான இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

Views: - 37

0

0