நாராயணசாமியை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்

26 August 2020, 4:37 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், மருத்துவமனைகளில் கூடுதலாக படுக்கைகள் ஏற்படுத்தி தரக்கோரி முதலமைச்சர் நாராயணசாமியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் படுக்கைகள் முழுமையான காரணத்தால் தொற்று உறுதி செய்யப்பட்டு வருபவர்களை தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை துணைநிலை ஆளுநர் மற்றும் அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூபாய்-10 ஆயிரம் வழங்க வேண்டும், மருத்துவமனையில் கூடுதலாக படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு விரைவாக பரிசோதனை முடிவுகளை அறிவிக்க போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து திடீரென போலீசாரின் தடுப்புகளை மீறி சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் முற்றுகை நடைபெற்று கொண்டிருந்த போது முதலமைச்சர் நாராயணசாமியின் காரை மறித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி காரில் இருந்து இறங்கி நடந்து சட்டசபைக்குள் சொன்றார். தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Views: - 32

0

0