பிரணாப் முகர்ஜியின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பு:முதல்வர் நாராயணசாமி இரங்கல்

31 August 2020, 9:04 pm
Pondy CM - Updatenews360
Quick Share

புதுச்சேரி: நாட்டின் மிகச்சிறந்த பொருளாதார மேதையை இழந்துவிட்டதாகவும், பிரணாப் முகர்ஜியின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பு என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், நாட்டின் மிகச்சிறந்த பொருளாதார மேதையாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்த பிரணாப் முகர்ஜி அனைவரிடமும் அன்பாக பழகி எதிர்கட்சிகளை அரவனைத்து செல்லக்கூடியவர் என்றும்,

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட பிராணப் முகார்ஜி தான் பொறுப்பு வகித்த அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டவர் எனவும், மிகச்சிறந்த பண்புகளை கொண்ட பிரணாப் முக்கர்ஜியின் மறைவு நாட்டிற்கே மிகப்பெரிய பேரிழப்பு என்றும் அவரை இழந்து வாடும் குடுபத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வதாக முதல்வர் நாராயணசாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0