கண்மாய்களை குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள உத்தரவிட கோரிய வழக்கு: மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…

9 September 2020, 4:24 pm
Madurai HC- updatenews360
Quick Share

மதுரை: கண்மாய்களை குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள உத்தரவிட கோரிய வழக்கில் குடிமராமத்து பணிகளை மக்களுக்கு தெரியும்படி இணையதளத்தில் வெளியிடவும், பணியின் போது கரைகளில் மரக்கன்றுகள் நடவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக் கோரியும் , முறைப்படி தேர்தல் நடத்தி குடிமராமத்து பணிகளை ஒதுக்கக் கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரதை சேர்ந்த போஸ் மற்றும் பலர் பொது நல மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் பாசன மேலாண்மை முறை சட்டப்படி மேலாண்மை குழுவை உடனடியாக அமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் மூலம் பொதுப்பணித்துறை ஒரு முழுமையான திட்டத்தை தயாரிக்க வேண்டும், அதில் , நீர்ப்பிடிப்பு பகுதியின் எல்லை,ஆக்கிரமிப்பு மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது,உள் மற்றும் வரத்து கால்வாய்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட பணிகள் இருக்க வேண்டும் . நில அளவை மற்றும் கிராம வரைபடத்தின்படி கால்வாய்கள் அடையாளம் காணும் பணியில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் ஈடுபடவேண்டும் . கால்வாய்கள் மூலம் கூடுதல் மழை நீரை விவசாய நிலங்களில் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

விவசாயிகள் பயனடையும் வகையில் கடைமடை வரை பணிகளை மேற் கொள்ள வேண்டும் . எல்லையை நிர்ணயிக்கும் வரைபடங்களின் நீர்நிலைகளை அடையாகாண வேண்டும், முறைகேடுகளாக நீர் நிலைகளில் பட்டா வழங்கியிருந்தால் அவற்றின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யூடிஆர் மற்றும் ‘அ’ பதிவேட்டின்படி , நீர்நிலைகள் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்,இதில் , அளவு குறைந்திருந்தால் , அதற்குரிய காரணம் பதிவு செய்யப்படடு, ஆக்கிரமிப்பு இருத்தால் அகற்ற வேண்டும் நீர்நிலைகளுக்கு வரத்து இல்லா விட்டால் அதற் குரிய காரணத்தை கண்டறிய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து,

குடிமராமத்து பணியில் மரக்கன்று நடுவது கட்டாயமாக வேண்டும் . அப்போது தான் நீர்நிலைகளின் கரைகள் வலுவாக இருக்கும். எல்லையை பாதுகாக்க முடியும். பாசன குழுவால் மரக்கன்றுகள் முறையாக பராமரித்து, நீர் நிலைகள் மற்றும் குடிமராமத்து தொடர்பான விபரங்களை வெப்சைட்டில் வெளியிட வேண்டும். அதில் இடம், எந்த வகை, வரைபடம்,விரிவாக்கம்,நீர்பிடிப்பு பகுதி,கால்வாய்,கொள்ளவு,மதகு பராமரித்தல்,சர்வே எண் உள்ளிட்ட விபரங்கள் இருக்க வேண்டும் . சர்வே விபரத்தில் ஆக்கிரமிப்பு விபரமும் இருக்க வேண்டும் .

இந்த விபரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் வெப்சைட்டில் வெளியிட வேண்டும்.கருத்துக்கள் கூற உரிய வசதி ஏற்படுத்த வேண்டும்.இனி வரும் காலங்களில் விவசாயிகள் சங்கங்களின் மூலம் குடி மராமத்து பணிகள் மேற் கொள்ள நடவடிக்கை எடுத்து பணிகள் மேற்கொள்வதற்கு முன்ன தாக அனைத்து விபரங்களையும் வெளியிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Views: - 0

0

0