ஈரானில் நடந்த கப்பல் விபத்தில் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த கப்பல் ஊழியர் மாயம்

Author: Udayaraman
5 January 2021, 5:27 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தமிழக – கேரள எல்லை பகுதியான ஈரானில் நடந்த கப்பல் விபத்தில் மாயமான படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த கப்பல் ஊழியரை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் தமிழக – கேரள எல்லைப் பகுதியான படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த ஜாண்சன் மகன் அஜின் 20. சென்னையில் ஐடிஐ மறைன் டிப்பிளமோ முடித்த இவர் கடந்த நவம்பர் மாதம் 2 தேதி முதல் ஈரான் நாட்டின் ஹராம்ஸ் கப்பலில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இந்த சரக்கு கப்பல் கடந்த டிசம்பர் மாதம் 26தேதி ஆழ்கடலில் கடல் சுழலில் சிக்கி கவிழ்ந்து உள்ளது. இந்த விபத்தில் அந்த கப்பலில் பணியில் ஈடுபட மொத்தம் ஏழு பேரில் ஈரான் நாட்டை சேர்ந்த இரண்டு பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரானை சேர்ந்த ஐந்து பேர் உட்பட அஜின் மாயமாகி இதுவரை இவர்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அஜினின் குடும்பத்தாருக்கு ஈரானில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மூலம் இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில அரசுக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனுக்கள் கொடுக்கபட்டுள்ளது.

Views: - 35

0

0