வாய்க்காலில் மூழ்கி பிளஸ் 1 மாணவி உயிரிழப்பு… காப்பாற்ற சென்ற தந்தை மாயம்

28 February 2021, 7:04 pm
Quick Share

ஈரோடு: வாய்க்காலில் மூழ்கி பிளஸ்1 மாணவி உயிரிழந்ததையடுத்து, காப்பாற்ற சென்ற தந்தையை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ரோடு, கதிர் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் செல்வகணபதி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு காயத்ரி ,அனுஸ்ரீ என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் செல்வகணபதி தனது மனைவி, மகள்களுடன் சேலம் ஆத்தூரில் உள்ள உறவினர் திருமணத்திற்காக சென்றுள்ளார். திருமணத்தை முடித்துவிட்டு இன்று தனது ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது நசியனூர் பெரிய வாய்க்கால் பகுதி அருகே வந்தபோது செல்வகணபதி மகள்கள் காயத்ரி ,

அனுஸ்ரீ வாய்க்காலில் குளித்து விட்டு செல்லலாம் என கூறியதையடுத்து அனைவரும் வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென காயத்ரி, அனுஸ்ரீ இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அதே வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் காய்த்திரியை காப்பாற்றி விட்டார். செல்வகணபதி தனது இளைய மகள் அனுஷ்யாவை காப்பாற்ற வாய்க்காலில் நீந்தி சென்றார். அப்போது அவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனிடையே சித்தோடு போலீசாருக்கும், பவானி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் அடித்துச் செல்லப்பட்ட செல்வகணபதி மற்றும் அனுஸ்ரீ யை தேடினர். இதில் வாய்க்காலின் சிறிது தூரத்தில் அனுஸ்ரீ உடல் மீட்கப்பட்டது. ஆனால் செல்வகணபதி உடல் இன்னும் மீட்கப்படவில்லை. தொடர்ந்து அவரை தேடும்பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட அனுஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 1

0

0