ஆட்டுக்கு இலை பறிக்க மரத்தின் மீது ஏறியவர் தவறி தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்து படுகாயம்

1 November 2020, 1:53 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே ஆட்டிற்க்கு இலை பறிக்க மரத்தின் மீது ஏறியவர் தவறி தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சின்ன செட்டிகுறிச்சி சேர்ந்த தங்கபாண்டியன் (42) இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தங்க பாண்டியம்மாள் (39) ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தங்கபாண்டியன் சிதம்பரபுரம் அருகே தோட்டத்தில் மரத்தின் மீது ஏறி இலை பறிக்கும் போது தவறி அருகே இருந்த தண்ணீர் இல்லாத மொட்டைக் கிணற்றில் விழுந்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதை அடுத்து தீயணைப்பு துறையினர் 80 அடி ஆழமுள்ள மொட்டைக் கிணற்றில் விழுந்த தங்கபாண்டியனை உயிருடன் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Views: - 12

0

0