பெரியப்பாவை வெட்டி கொலை செய்து விட்டு அரிவாளுடன் சுற்றித்திரிந்த நபர் : 5 நாட்களுக்கு பின்பு மாறுவேடத்தில் சென்று பிடித்த போலீசார்

2 July 2021, 2:56 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடத்தகராறு காரணமாக சொந்த பெரியப்பாவை வெட்டி கொலை செய்து விட்டு வெட்டிய அரிவாளுடன் சுற்றித்திரிந்த நபரை 5 நாட்களுக்கு பின்பு மாறுவேடத்தில் சென்று பிடித்த போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மேலத்தெருவில் வசித்து வந்தவர் 73 வயது கூலித்தொழிலாளியான பிலாவடியான். இவரது வீட்டின் அருகே உள்ள இடம் சம்பந்தமாக பிலாவடியானின் மனைவியின் தங்கை மகனான பூமாடன் என்பவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிலாவடியான் வத்திராயிருப்பு காவல் நிலையம் அருகே வெள்ளை பிள்ளையார் கோயில் அரசமரத்தடியில் அமர்ந்திருந்திருந்துள்ளார்.இந்நிலையில் குடி போதையில் வந்த பூமாடன் மரத்தடியில் அமர்ந்திருந்த பிலாவடியான் முதியவரை கடந்த மாதம் 26 ஆம் தேதி தலையின் பின்புறம் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார்.

படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து துடிதுடித்து இறந்துள்ளார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு காவல்துறையினர் உடலை கைப்பற்றி இந்த கொலை சம்பந்தமாக வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் பார்த்திபன் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இடப்பிரச்சினை சம்பந்தமாக சொந்த பெரியப்பாவை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் தப்பியோடிய குற்றவாளியான பூமாடன் என்பவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் மாறு வேடத்தில் 15 க்கும் மேற்பட்ட காவல் துறையின் கடந்த 5 நாட்களாக மேற்கு மலை அடிவாரப் பகுதிகளில் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று சேதுநாராயணபுரம் பகுதியில் மாறுவேடத்தில் காவல்துறையினர் குற்றவாளியை தேடிய நிலையில் குற்றவாளியான பூமாடன் வெட்டிய அதே அரிவாளுடன் சுற்றித்திரிந்துள்ளான். பின்னர் அவனிடம் காவல்துறையினர் விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதை அடுத்து பூமாடனை கைது செய்த காவல்துறையினர் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் வைத்து காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 124

0

0