சர்வீஸ்க்கு வந்த காரை ஓட்டி சென்ற மெக்கானிக் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

Author: Udhayakumar Raman
21 September 2021, 6:29 pm
Quick Share

அரியலூர்:அரியலூர் புறவழிசாலையில் சர்வீஸ்க்கு வந்த காரை ஒட்டி சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

அரியலூர் மின்நகரை சேர்ந்தவர் மகேஷ். இவர் மெக்கானிக் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். இந்நிலையில் சர்வீஸ்க்கு வந்த காரை இன்று அவரது மகன் ஹரிஹரன் என்கிற ஹரி எடுத்து கொண்டு தனது நண்பர்களான யோகேஷ், ஹரிஹரனுடன் காரை ஒட்டி சென்றுள்ளார். அப்போது அரியலூர் புறவழிசாலையில் அல்லிநகரம் அருகே காரை வேகமாக ஒட்டி சென்றபோது திடீரென ஹரியின் கட்டுபாட்டை இழந்த கார் அருகில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரை ஒட்டிய ஹரி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். காயமடைந்த அவரது நண்பர்கள் இருவரும் அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 124

0

0