கொரோனா பாதிப்பு குறையும் வரை பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…

19 August 2020, 5:48 pm
Quick Share

ஈரோடு: கொரோனா பாதிப்பு குறையும் வரை பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்றும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் மூப்பனார் பிறந்தநாளையொட்டி மரம் நடுவிழா நடைபெற்றது .இதில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மரக்கன்றை நட்டடார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் , முதல்வர் பொறுப்பேற்ற பிறகு பவானிசாகர், மேட்டூர் அணைகள் நிரம்பி , குறிப்பிட்ட தேதிகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து நேற்று ஆலோசனை நடைபெறவில்லை என்றும் கொரோனா பாதிப்பு குறையும் வரை பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்றார். மேலும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார் என்றும், ஆசிரியர் தகுதி தேர்வில் தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என்றும் தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் அதில் மாற்று வழி கொண்டு வர வாய்ப்பில்லை என்றார்.

Views: - 27

0

0