ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்…

5 August 2020, 11:53 pm
Quick Share

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளாத வயதிலும் தடி ஊணியவாறு தன்னுடை வீட்டு மனையை மீட்டு தரக்கோரி மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்க முதியவர் வந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரத்தை அடுத்த திருநந்திபுரம் பகுதியை சார்ந்த ஊனமுற்றோரான ராஜேந்திரன் தனக்கு சொந்தமான காலி மனையை முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மணி என்பவர் தன் பெயருக்கு ஏமாற்றி மாற்றி விட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பட்டா மாற்றுவதற்கு மணியின் மகனான அன்பரசன் அதிமுகவில் கிளை இளைஞர் செயலராக இருப்பதால் பட்டா மாற்றவிடாமல் தடையாக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து மனு அளிக்க வந்தார்.

முதியவர் மண்ணெண்ணெய் கேனுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வருவதை கண்ட போலீசார் அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி கொண்டு முதியவரை அழைத்து சென்று விசாரணை செய்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வைத்தனர். முதியவர் நடக்க முடியாத வயதிலும் தடி ஊணி கொண்டு தன்னுடை வீட்டு மனையை மீட்டு தர மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 5

0

0