தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது

7 November 2020, 10:28 pm
Quick Share

சென்னை: கொடுங்கையூர் பகுதியில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார், 6 செல்போன் , மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் , வியாசர்பாடி , எம்.கே.பி நகர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து செல்போன் திருட்டு சம்பவம் நடை பெறுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொடுங்கையூர் திருவள்ளு வர் நகர் பகுதியை சேர்ந்த ராஜீவ்ராவ் என்பவரது செல்போனை சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றார்.

அந்த காட்சிகள் சிசிடிவி கேமரா பதிவில் தெளிவாக தெரிந்ததால் அதனை வைத்து புளியந்தோப்பு திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (19) என்ற நபரை பிடித்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை செய்தனர். இதில் அவன் கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில்  6 செல்போன்களை திருடியதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவரிடமிருந்து 6 செல்போன் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் சூர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 17

0

0