பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த நபர் கைது

23 February 2021, 8:13 am
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பேருந்தில் 18 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்தை சோதனை மேற்கொண்டபோது, அதில் பயணிகளை போன்று ஒரு நபர் தனது பையில் மறைத்து வைத்து 18 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

அதனை பறிமுதல் செய்த போலீசார் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியை சேர்ந்த விக்ரம் என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா கடத்தல் சம்பவம் தொடர்பாக ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திரமாநிலத்தில் இருந்து தொடர்ந்து தமிழகத்திற்கு கஞ்சாவானது பயணிகளை போன்று நூதன முறையில் பேருந்து மற்றும் வாகனங்களில் கடத்தி வரும் சம்பவம் தற்போது தொடர்கதையாகி வருகிறது.

Views: - 11

0

0