ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க உதவி செய்வது போல் முதியவரிடம் பணத்தை பறித்த நபர்..!

Author: Udhayakumar Raman
22 September 2021, 6:42 pm
Quick Share

கோவை: கோவை குனியமுத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க உதவி செய்வதாக முதியவர் ஒருவரை ஏமாற்றி 35 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

கோவை குனியமுத்தூர் அன்னை நகரை சேர்ந்தவர் மோகன் குமார் (67). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்-ல் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதை கவனித்து வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் முதியவருக்கு உதவி செய்வதுபோல் வந்துள்ளார். பின்னர் ஏ.டி.எம்.,-ன் ரகசிய எண்ணை தெரிந்து கொண்ட அந்த இளைஞர், ஏ.டி.எம் கார்டை மாற்றி, முதியவரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர் சந்தேகமடைந்த முதியவர் மோகன் குமார் உறவினர் உதவியுடன் வங்கி கணக்கை சரிபார்த்த போது 35 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. அதேபோல ஏடிஎம் கார்டு மாற்றப்பட்டதையும் அறிந்து கொண்டார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.தொடர்ந்து போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு மோசடி நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 82

0

0