குமரியில் பளுதுபார்க்க ஒப்படைத்த கடைகளை அபகரிக்க முயற்சித்த பிளம்பிங் காண்ட்ராக்டர்.! கடை முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்

25 February 2021, 1:24 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவில் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் அருகே நான்கு கடைகளை பழுதுபார்க்கும் பணிகளுக்காக ஒப்படைத்த ப்ளம்பிங் பணியாளர், பணிகளை முடிந்து கடைகளை ஒப்படைகாமல் தானே அபகரித்து கொண்டதாக இடத்தின் உரிமையாளர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு கடை முன் அமர்ந்து கடைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரிமாவட்டம் நாகர்கோவில் அருகே வடிவீஸ்வரம் பெரிய தெருவை சேர்ந்தவர் சேதுபார்வதி பாய் (67).இவர் கடந்த 2017 -ம் ஆண்டு தன் வீட்டில் பிளம்பிங் பணிகள் செய்ய வந்த ராஜ்குமார் என்பவரிடம் நாகர்கோவில் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் அருகே தனக்கு சொந்தமான நான்கு கடைகள் பழைய கட்டிடத்தில் உள்ளது.

அதனை பழுதுபார்த்து தருமாறு கூறி அதற்காக ரூ.16.5 லட்சம் கொடுத்ததாக சேது பார்வதி பாய் கூறினார். கடைகள் பணிகளை முடிந்து கடைகளை ஒப்படைகாமல் தானே அபகரித்து கொண்டதாக தற்போது இடத்தின் உரிமையாளர் வயதான சேது பார்வதி பாய் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனை தொடர்ந்து சம்பந்தபட்ட கடைகள் முன் வந்து அமர்ந்து கடைகளை ஒப்படைக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுயுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏழு மாதங்களாக கடைகளை தராமலும் அதற்குரிய வாடகையும் தராமல் ஏமாற்றி வருவதாக சேது பார்வதி பாய் வேதனை தெரிவித்து உள்ளார்.

Views: - 1

0

0