பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.!ஒரு கிலோ மல்லிகை ரூ.2500 விற்பனை

13 January 2021, 2:46 pm
Quick Share

கன்னியாகுமரி: பொங்கல் பண்டிகையையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு. நேற்று முன்தினம் கிலோ ஒன்றிக்கு ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை 2500 ரூபாயாகவும் பிச்சி 600 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாகவும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தை மிகவும் புகழ் வாய்ந்தது. இங்கு மதுரை, திண்டுக்கல், ராயகோட்டை, பெங்களூர், ஓசூர் மற்றும் உள்ளூர் பகுதிகளான ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், குமாரபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 20 டன் மேலாக பூக்கள் வரத்து இருக்கும். அதைப்போல் இங்கிருந்து தமிழகம் மட்டுமல்லாது கேரளா வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி நடைபெறும். இந்நிலையில் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் தோவாளை மலர் சந்தையில் அனைத்து வகையான பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் கிலோ ஒன்றிக்கு 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ 2500 ரூபாயாகவும், பிச்சிபூ 600 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாகவும், கேந்தி 60 ரூபாயில் இருந்து 90 ரூபாயாகவும், ரோஜா 170 ல் இருந்து 240 ரூபாயாகவும், வெள்ளை சிவந்தி 100 ரூபாயில் இருந்து 190 ரூபாயாகவும், அரளி 140 ரூபாயில் இருந்து 280 ரூபாயாகவும் என அனைத்து வகையான பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.

Views: - 3

0

0