உதகையில் கொட்டும் மழையிலும் நியாய விலை கடைகளில் குவிந்த பொதுமக்கள்…

16 May 2021, 4:59 pm
Quick Share

நீலகிரி : உதகையில் இன்று கன மழை பெய்து வந்த போதிலும் கொரோனா நிவாரண தொகையைப் பெற நியாயவிலை கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

தமிழக அரசானது கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் அறிவித்தது. இதில் முதல் தவணையாக 2000 கொடுக்கப்பட்டு வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் இந்த கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உதகையில் இன்று கன மழை பெய்து வந்த போதிலும் கொரோனா நிவாரண தொகையைப் பெற நியாயவிலை கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். சமூக இடைவெளி மற்றும் கிருமிநாசினிகள் வழங்கப்பட்டு நியாய விலை கடை ஊழியர்கள் 2000 ரூபாயை வழங்கினர்.

Views: - 58

0

0