கொடைக்கானல் பகுதியில் தரமற்ற சாலை அமைப்பதாக பொது மக்கள் புகார்

Author: kavin kumar
8 August 2021, 7:34 pm
Quick Share

திண்டுக்கல்: கொடைக்கானல் பகுதியில் தரமற்ற சாலை அமைப்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்து ஒப்பந்தக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு பிறகு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் செண்பகனுர் பிரகாசபுரம் சாலைப் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வைரவர் கோயில் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது சரியாக சாலை அமைக்கவில்லையென அப் பகுதியைச் சேர்ந்த சிலர் சாலை அமைக்கும் ஒப்பந்தக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதையடுத்து சிறிது நேரம் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு நகராட்சி உதவி பொறியாளர் மற்றும் அலுவலர்கள் சென்று பேச்சு வார்த்தை நடத்தி சரியான முறையில் தரமான சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து மீண்டும் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

Views: - 159

0

0