ஆம்புலன்ஸ்கள் இன்றி அவதிப்படும் கொரோனா நோயாளிகள்: கோவைக்கு உதவிக்கரம் நீட்டிய தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை

17 May 2021, 9:41 pm
Quick Share

கோவை: கோவையில் நோயாளியை அழைத்து செல்ல தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவின் ஆட்டத்துக்கு வயது வித்தியாசமோ அல்லது ஆண், பெண் பேதமோ இல்லாமல் பலரும் இரையாகி வருகின்றனர்.தமிழ்நாட்டை பொறுத்தவரை நிலமை கொஞ்சம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா அரக்கனை கட்டுப்படுத்தவும், அடியோடு அழிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதைப் பயன்படுத்தி, தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. ஒரு பக்கம் படுக்கை, ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிர் போகிறது என்றால் மறுபக்கம் நோயாளியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் இல்லாமல் உயிரிழக்கிறார்கள். இதை மனதில் கொண்டு கோவை அரசு மருத்துமனையில் நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துவர, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் மாநகராட்சிக்கு அளித்துள்ளது. இவ்விழாவில் பொது மேலாளர் தேவன் உட்படகுமாரவேல் பாண்டியன் ஆணையாளர், மருத்துவர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 57

0

0