வீட்டுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதி

Author: Udhayakumar Raman
17 October 2021, 5:56 pm
Quick Share

விழுப்புரம்: அரகண்டநல்லூர் அருகே வீட்டுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் வீட்டின் உரிமையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மணம்பூண்டி பகுதியில் உள்ள கோட்டமருதூர் சாலையில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் வீட்டின் உரிமையாளர்கள் அவதியடைந்துள்ளனர். மழை நீர் உள்ளே புகுந்ததால் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் தங்களது உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தும்,

வீட்டின் மேல் மாடியில் தஞ்சமடைந்தும் வரும் சூழலில், நான்கு நாட்களை கடந்து வீடுகளில் புகுந்த மழை நீரை அப்புறப்படுத்த இதுவரை ஊராட்சி நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி வாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், இப்பகுதிக்கு அருகில் உள்ள முருகன் கோவில் குளம் மழைகாலங்களில் நிரம்பும்போது, உபரி நீர் வெளியேற முறையான வடிகால் வசதி செய்யப்படாத காரணத்தினாலேயே அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் தஞ்சம் புகுவதாக இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகம் வீடுகளில் புகுந்துள்ள மழைநீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 49

0

0