கோவில் உண்டியல் உடைத்த நபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.….

Author: kavin kumar
29 September 2021, 10:43 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே கோவில் உண்டியல் உடைத்த நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசராம்பட்டு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.. இக்கோவிலின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து ஒருவர் உள்ளே நுழைந்தார்.பின்பு அங்கிருந்த உண்டியலை இரும்பு கம்பியால் உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு இருந்தார். சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் கோவிலின் உள்ளே சென்று பார்க்க சென்றபோது, உண்டியலில் இருந்து பணத்தை பாக்கெட்டில வைத்துகொண்டு இருந்த நபர் பொதுமக்களை பார்த்தவுடன் மீதி பணத்தைப் போட்டுவிட்டு, தப்பிக்க காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்தபோது பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி தொடுத்து, பின்னர் கோவில் உண்டியலை உடைத்த நபரை சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குபதிவு செய்து விசாரணை செய்தபோது கள்ளக்குறிச்சி மாவட்டம்உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எனறயூர் கிராமத்தைச் சேர்ந்த ராயப்பன் மகன் சகாயராஜ் பாண்டியன்(வயது 43)என தெரியவந்தது. அவரிடமிருந்து ரூபாய் ஆயிரத்து 1100 பணத்தையும், 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள பஜாஜ் பல்சர் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து கைது செய்தனர் .இவர் மீது கள்ளக்குறிச்சி விழுப்புரம்,கடலூர் மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 175

0

0