சிகரெட்டை கடனாக தர மறுத்த கடை உரிமையாளருக்கு அடி உதை:2 இளைஞர்கள் கைது

Author: Udhayakumar Raman
20 October 2021, 3:28 pm
Quick Share

சென்னை: சென்னையில் சிகரெட்டை கடனாக தர மறுத்த கடை உரிமையாளரை தாக்கிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் 21 வது தெருவில் வசித்து வருபவர் தேவானந்தம் வயது 46. தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். கொளத்தூர் நீலமேகம் தெருவில் உள்ள மளிகை கடைக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்து கொண்டிருந்தார். அப்போது மது போதையில் மளிகை கடைக்கு வந்த 2 இளைஞர்கள் சிகரெட்டை கடனாக கேட்டுள்ளனர்.அப்போது மளிகை கடையில் இருந்த பெண்மணி கடன் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இரண்டு இளைஞர்களும் மளிகைக் கடையில் வைத்திருந்த பொருட்களை அடித்து உடைத்து அந்த பெண்மணியிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர்.

இதனை பார்த்த தேவானந்தம் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இரண்டு இளைஞர்களும் தேவானந்தத்தை கடுமையாகத் தாக்கி உள்ளனர். இது குறித்து தேவானந்தம் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து  கொளத்தூர் சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் 23 மற்றும் கொளத்தூர் மகாத்மா காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்கின்ற விக்கி வயது 21 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.அவரிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த ராஜமங்கலம் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 81

0

0