பெற்ற தாயையே சொத்துக்காக கொடூரமாக தாக்கும் மகன்: வெளியான பதை பதைக்க வைத்த சிசிடிவி காட்சி…!!

4 September 2020, 10:19 pm
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பெற்ற தாயையே சொத்துக்காக மகனேகொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி காவல் எல்லைக்குட்பட்ட வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஆலயம்மாள் வயது 70 , இவருக்கு நான்கு மகன் ஒரு மகள். இதில் மூத்த மகனான பூபதி கூலி வேலை செய்து வருகிறார். இவர் பல நாட்களாக தன் தாயிடம் சொத்தைப் பிரித்துக் கொடுக்க சொல்லி சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சொத்தைப் பிரித்துக் கொடுக்க சொல்லி தன் தாயிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தாய் ஆலயம்மாள் இப்பொழுது பிரித்துக் கொடுக்க முடியாது என்று தன் மகனிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் பூபதி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தன் தாயின் கழுத்து கை முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஆலயம்மாள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பெற்ற தாயை தன் மகனே கத்தியால் குத்தும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை ஓட்டேரி காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டு சிசிடிவி காட்சியை கைப்பற்றி தன் தாயின் என்று கூட பார்க்காமல் கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மகன் பூபதியை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Views: - 0

0

0