பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

25 September 2020, 5:54 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மின் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் துறை தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது, இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் மின் துறை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும், கொரோனா ஊரடங்கு காலத்தில் மின் கட்டணத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மின் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Views: - 7

0

0