கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே தலைகுப்புற லாரி கவிழ்ந்து விபத்து

2 November 2020, 9:21 pm
Quick Share

காஞ்சிபுரம்: எம் சாண்ட் மணல் ஏற்றி கொண்டு வேகமாக வந்த லாரி தாம்பரம் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசி பகுதியில் தற்போது 6 வழி சாலைக்குண்டான மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றது. அதனை ஒட்டி வாலாஜாபாத் முதல் மணிமங்கலம் வரை 6 வழி சாலையை அகலப்படுத்தும் பணியும் விரைந்து நடந்தேறி வருகிறது. பல இடங்களில் இந்த சாலை பணிகள் நடைபெற்று வருவதால் அந்த இடங்களை கடக்கும் வாகனங்கள் அனைத்தும் மிகவும் மெதுவாக சாலையை கடக்கின்றது. பணிகள் நடைபெறும் இடத்தினை மெதுவாக கடக்க வேண்டுமென நெடுஞ்சாலை துறையும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஒரகடம் டு காஞ்சிபுரம் நெடுஞ்சாலை வழியாக எம்சாண்ட் ஏற்றி கொண்டு மிக வேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாரணவாசி என்ற பகுதியில் சாலையின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் லேசான காயத்துடன் தப்பினர். இந்த விபத்தால் தாம்பரம் காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபரத்தை கேள்விப்பட்டு சம்பளத்துக்கு வந்த ஒரகடம் காவல்துறையினர் சாலையின் நடுவே உள்ள லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் .

Views: - 20

0

0