ஊருக்குள் புகுந்த காட்டுயானை வீட்டை சேதப்படுத்தியது

20 October 2020, 4:57 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சிக்குட்பட்ட நம்பி குன்னு பகுதியில் இன்று உள்ள வீட்டை காட்டுயானை தாக்கி சேதப்படுத்தியது.

முதுமலை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. குடியிருப்புகள் மட்டுமல்லாமல் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் முதுமலை ஊராட்சிக்குட்பட்ட நம்பி குன்னு பகுதியில் இரவில் புகுந்த காட்டு யானை விளைநிலங்களையும் சாந்தா என்பவரது குடியிருப்பையும் சேதப்படுத்தியது. இந்த அதிர்ஷ்டவசமாக குடியிருப்புக்குள் இருந்தவர்கள் உயிர் தப்பினர். எனவே யானைகள் ஊருக்குள் புகுவதை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 13

0

0