புதுச்சேரியில் மிக மிக மோசமான ஆட்சி நடைபெகிறது: ரங்கசாமி குற்றச்சாட்டு

27 November 2020, 3:50 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் மிக மிக மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாக என்.ஆர்.தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய என்.ஆர். தலைவர் ரங்கசாமி புதுச்சேரியில் அதிமுக, என்ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி தொடர்வதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரிமணிகண்டன், பாஸ்கர் உள்ளிட்டோர் மரியாதை நிமிர்த்தமாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, வரும் 2021ம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி தொடரும் என்றும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து துணைநிலை ஆளுநரை குறை கூறி வருவதாகவும், மிக மிக மோசமான ஆட்சி தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார், மேலும் பேசிய அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Views: - 17

0

0