பட்டப்பகலில் பெண்ணின் கைப்பையை பறித்துச்சென்ற இளைஞர்: தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்

15 July 2021, 7:58 pm
Quick Share

கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் பட்டப்பகலில் பெண்ணிடம் இருந்து கைப்பையை பறித்துச்சென்ற சிறுவர்கள் மடக்கிப்பிடித்த மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மத்தம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயபிரபா.இவர் தனது உறவினர் இல்லம் அமைந்துள்ள மேட்டுப்பாளையத்திற்கு வந்து விட்டு வீடு திரும்புவதற்காக காட்டூர் ரயில்வே கேட் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது,அவரை பின்தொடர்ந்து வந்த பாலப்பட்டி அண்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் விஜயபிரபா வைத்திருந்த கைப்பையை திடீரென பறித்துச் சென்றுள்ளார்.

இதனால் பதறிய விஜயபிரபா கூச்சலிட்டுள்ளார்.சாலையில் பெண் கூச்சலிடுவதை கண்ட அப்பகுதி மக்கள் கைப்பையை பறித்துச்சென்ற ராஜேந்திரனை துரத்திச்சென்று அரசு மருத்துவமனை அருகே மடக்கிப்பிடித்தனர்.இதனையடுத்து பொதுமக்கள் அவனுக்கு தர்ம அடி கொடுத்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதனையடுத்து அவர்களிடம் மேட்டுப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 112

0

0