இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தலை துண்டித்து கொலை: மர்மநபர்களுக்கு போலீசார் வலை

Author: Udhayakumar Raman
22 September 2021, 11:51 pm
Quick Share

திண்டுக்கல்: ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரின் தலையை மர்மநபர்கள் துண்டித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா உட்பட்ட அனுமந்தராயன் கோட்டை ஊராட்சியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் கூலி வேலை செய்து வருகிறார் இன் நிலையில் இன்று மாலை அருகே உள்ள வட்டப்பாறை என்ற பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார் சென்றபோது மர்ம நபர்கள் ஸ்டீபன் ராஜ் சுற்றிவளைத்து அவர்கள் கொண்டுவந்த பயங்கர ஆயுதங்கள் ஆன கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கி அவரது தலையை துண்டித்து வட்டப்பாதையில் இருந்து அனுமந்தராயன் கோட்டை மையப்பகுதியில் தலையை வைத்து விட்டு சென்று விட்டனர்.

எதற்காக ஸ்டீபன்ராஜ் கொல்லப்பட்டார் இவருக்கு முன்விரோதம் உள்ளதா கொலையாளிகள் யார் என தற்போது திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் திண்டுக்கல் தேனி சரக டிஐஜி ஆகியோர் கொலை நடந்த இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர் விசாரணைக்கு பின்பே யார் கொலை செய்தார்கள், எதற்காக கொலை செய்தார்கள் என்பது தெரியவரும் தற்போது தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 189

0

0