நாளை முதல் திரையரங்குகள் திறப்பு: தொடங்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு

14 October 2020, 10:21 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்படுவதால் டிக்கெட் முன்பதிவும் தொடங்கப்பட்டது.

புதுச்சேரியில் 5ம் கட்ட ஊரடங்கு தளர்விற்கு பின்னர் புதுச்சேரியில் உள்ள சில திரையரங்குகள் மத்திய அரசு வழிகாட்டுதல் படி நாளை மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி திரையரங்குகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தும், சமூக இடைவெளியுடன் அமர இருக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் சில திரையரங்குகளில் பார்வையாளர்களை கவரும் வகையில் ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் ரூ.100க்கும்,

இதேபோல் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் ரூ.75க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் திரையங்குகளுக்கான ஆன்லைன் புக்கிங்கும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. திரையங்குகளுக்கு வரும் பார்வையாளர்களை வெப்ப பரிசோதனை செய்தும், கைகளை சுத்தம் செய்தும் திரையரங்குகளுக்குள் அனுமதிக்கபட உள்ளனர். மேலும் முககவசம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மத்திய அரசின் உத்தரவு படி நாள்தோறும் பகல்11.45, மதியம் 3 மணி, மாலை 6.45 ஆகிய 3 காட்சிகள் மட்டுமே காட்சிகள் திரையிடபட உள்ளது.

Views: - 27

0

0