ஆன்லைன் விளம்பரம் மூலம் பல்வேறு பகுதிகளில் திருட்டு: கேமராக்களுடன் போலீசில் சிக்கிய ஆசாமி!!

Author: Udayaraman
8 October 2020, 4:21 pm
Quick Share

ஈரோடு: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் விளம்பரம் மூலம் பல்வேறு பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை பெருந்துறை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் சங்கர்.‌இவர் பெருந்துறை-ஈரோடு சாலையில் ஜெராக்ஸ் எடுக்கும் கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்டகளுக்கு முன்பு இவரது கடையில் வைத்திருந்த 50 ஆயிரம் மதிப்பிலான கேமராவை காணவில்லை என்று பெருந்துறை நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த நபரை விசாரணை செய்ததில், அவர் அளித்த தகவல் முன்னுக்குப்பின் முரணாக இருந்துள்ளது.

சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர் வைத்திருந்த பையில் கோமரா இருந்துள்ளது ‌.மேலும் விசாரணையில்,: இவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பீர் ரிஸ்வான் ஹாசன் என்பதும், ஆன்லைனில் கேமரா வாடகைக்கு என்ற விளம்பரங்கள் மூலம் அவர்களை தொடர்பு கொண்டு பின்னர் அவற்றை திருடு பெங்களூரில் விற்பனை செய்து வந்துள்ளார். பின்னர் பெருந்துறையில் கேமராவை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். இதேபோல் கோவையிலும் கேமராவை திருடுவிட்டு திருச்சிக்கு செல்லும்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து 1லட்சம் மதிப்பிலான இரண்டு கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Views: - 28

0

0