சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை: நாராயணசாமி பேட்டி

25 January 2021, 2:47 pm
Pondy CM - Updatenews360
Quick Share

புதுச்சேரி: இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவல் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா குறித்து சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, 2 சட்டமன்ற உறுப்பினர் பதவி ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை என்னிடம் கொடுக்கவில்லை. அமைச்சருக்கு முழு ஒத்துழைப்பு அமைச்சரவையில் கொடுக்கப்பட்டுள்ளது. நமச்சிவாயம் கொடுத்த ராஜினாமா சபாநாயகர் சுதந்திரமாக முடிவெடுப்பார். அமைச்சர் பதவி ராஜினாமா பற்றியும் நான் சுதந்திரமாக முடிவு செய்வேன். சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா விவகராம் கட்சி மேலிடத்திற்கு அனுப்பட்டுள்ளது.

கட்சி எடுக்கும் முடிவுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். பாஜகவில் சேர முயல்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள். இது எனது கடந்த கால அனுபவங்கள் உள்ளது. காங்கிரஸ் கட்சியை யாராலும் அழித்து விடமுடியாது. தேர்தல் நேரத்தில் இது போன்ற விவகாரங்கள் வரத்தான் செய்யும் இதை எதிர்ப்பார்த்து தான். அமைச்சர்களின் எந்த துறைகளிலும் நான் தலையிடவில்லை. இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவல் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. அவர்கள் சுயநலத்துக்காக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வது எந்தவித தாக்கத்தையும் புதுச்சேரியில் ஏற்படாது. புதுச்சேரியில் திமுக கூட்டணியோடு காங்கிரஸ் கட்சி பலத்துடன் உள்ளது என்றார்.

Views: - 6

0

0