அதிமுகவில் சேரும் இளைஞர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் வரும்: அமைச்சர் பெஞ்சமின் பேச்சு

17 September 2020, 10:54 pm
Quick Share

திருவள்ளூர்: அதிமுகவில் சேரும் இளைஞர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் வரும் என ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் காரனோடை பகுதியில் எம்ஜிஆர் சிலை அருகே அதிமுக உறுப்பினர் ஆலோசனை கூட்டம் பேருந்து நிலையத்தின் உள்ளே நடைபெற்றது. இதில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைத்தார். பின்னர் அவர் பேசுகையில், அதிமுகவில் சேரும் இளைஞர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் அனைவரும் அதிமுகவில் சேருங்கள் என தெரிவித்தார்.

பின்னர் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அனைவருக்கும் உணவினை வழங்கினர். முன்னதாக சாலையோரத்தில் பல்வேறு இடங்களில் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைத்து அமைச்சரை வரவேற்றனர். இதில் கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.