வீடுகளில் சூழ்ந்த அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள்: ஊரை காலி செய்து கொண்டு வெளியேறிய கிராமமக்கள்

24 August 2020, 2:54 pm
Quick Share

திருவள்ளூர்: வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் வீடுகளை சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட கிராமமக்கள் ஊரை காலி செய்து கொண்டு குடும்பத்துடன் வெளியேறி சாம்பல் கழிவில் இறங்கிப் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செப்பாக்கம் கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் குளம் மற்றும் குழாய்களில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்ததால் அங்கு வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கிராமத்தில் சாம்பல் கழிவு சூழ்ந்து பாதிப்படைவது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறும் முடிவை எடுத்துள்ளன.

வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்களை வழங்கிய தங்களுக்கு தற்போது சாம்பல் கழிவு காரணமாக வசிப்பற்கும் இடம் இல்லாமல் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். அவர்களிடம் காவல்துறையினரும் மீஞ்சூர் ஊராட்சி குழு தலைவர் ரவி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சாம்பல் கழிவு நீரில் இறங்கி ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி அங்கு வந்த அனல் மின் நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Views: - 29

0

0