பட்டா பெயர் மாற்றம் செய்ய 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது

Author: Udhayakumar Raman
26 August 2021, 3:52 pm
Quick Share

விழுப்புரம்: வானூர் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே தைலாபுரம் கிராமத்தில் உத்திரகுமார் என்பவருக்கு நிலத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்ய தைலாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜீ ரூ 20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து விவசாயி உத்திரகுமார் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயணம் தடவிய ரூ 20 ஆயிரம் பணத்தை கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் ராஜி லஞ்சமாக வாங்கியபோது மறைந்திருந்த போலீசார் லஞ்ச பணத்துடன் கையும் களவுமாக தைலாபுரம் வி.ஏ.ஓ ராஜியை கைது செய்து, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Views: - 127

0

0